இல. கணேசன் பதவியேற்றார்

மணிப்பூர் மாநில ஆளுநராக பா.ஜ.க மூத்த தலைவர் இல. கணேசன் அவர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரத்தில் அறிவித்தார். முன்னதாக, சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், இல. கணேசன் தற்போது நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க தேசிய குழு உறுப்பினர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை இல. கணேசன் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார். பிறகு நேற்று மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நேற்று அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார்.