மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்திய பாராலிம்பிக் கமிட்டி 2017 முதல் 2021 வரை ரூ. 32 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது. இதர விளையாட்டு வீரர்களுக்கு இணையாக பாராலிம்பிக் தடகள வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உதவிகளும் வழங்கப்படுகின்றன. பாரா தடகள வீரர்களுக்காக ‘Tops’ திட்டத்தின் கீழ் கடந்த பாராலிம்பிக் சுழற்சியின் போது, கூடுதலாக ரூ. 10.50 கோடி செலவிடப்பட்டது. அரசின் நிதியுதவி வழங்குவதற்கான பிரிவில், பாரா விளையாட்டுகள் முன்னுரிமை பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.