குஜராத் வதோதராவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி முஸ்லிம்களின் அமெரிக்க கூட்டமைப்பின் (AFMI) வெளிநாட்டு பணம் பெறும் எப்.சி.ஆர்.ஏ உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. சட்டவிரோதமான மத நடவடிக்கைகளுக்காகவும், சட்டவிரோத மத மாற்றங்களுக்காகவும் இந்த அரசு சாரா அமைப்பு வெளிநாட்டு நிதியை பெற்று பயன்படுத்தியுள்ளதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பாரத நேபாள எல்லையில், காஷ்மீரத்தில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள், உத்தர பிரதேச வெகுஜன மதமாற்றம், டெல்லி சி.ஏ.ஏ கலவர வழக்கில் ஈடுபாடு என பல தேசவிரோத செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அப்துல்லா ஃபெஃப்டாவாலா மற்றும் முஸ்தபா தனவாலா என்ற இந்த என்.ஜி.ஓ பயனாளிகளுக்கு எதிராக வதோதரா காவல்துறை ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட சலாவுதீன் ஷேக் இங்கிலாந்தின் அல் ஃபலாஹ் அறக்கட்டளையிடமிருந்து பெற்ற 19 கோடி வெளிநாட்டு நிதியை வேறு சில பினாமிகளுடன் சேர்த்து மோசடி செய்தது கண்டறியப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்துறை அனுப்பிய சம்மனுக்கு பதிலளிக்கவில்லை.