இலவச ரேசன் திட்டம் நீட்டிப்பு

நாடு முழுவதும் கடந்த 2020ல் கொரோனா பெருந்தொற்று பரவி மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியது. இதனால், பொருளாதார நெருக்கடியால் மக்கள் கஷ்டப்பட்டனர். இதனை முன்னிட்டு கோடிக்கணக்கான மக்களின் பசியை போக்கி அவர்களை பாதுகாக்கும் வகையில், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவு தானியத்துடன் இந்த திட்டத்தினால், ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக கிடைக்கும். மக்களின் நலன் கருதி இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தினை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்கு கூடுதலாக ரூ. 80 ஆயிரம் கோடி செலவாகும். இந்த திட்டத்திற்காக மொத்தம் 3.4 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது. 80 கோடிக்கும் கூடுதலான நாட்டு மக்கள் இதனால் பயனடைவார்கள்.