கட்டணமில்லா எம்.பில். படிப்பு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பில், ‘தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2021- 22ம் கல்வியாண்டிற்கான இந்த பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தளம் www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்- 16.08.2021. கல்விக் கட்டணம் கிடையாது. மாணவ, மாணவியர் இலவசமாக தங்கும் விடுதி வசதியுடன், கட்டணமில்லாமல் எம்.பில். படிக்க விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவியர்க்குத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.