கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையையொட்டி, மத்தியில் அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகளால், மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜன் உற்பத்தி கடந்த பிப்ரவரியில் இருந்ததைவிட தற்போது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. பாரதத்தில், பிப்ரவரி முதல் வாரத்தில், ஒரு நாளுக்கான மருத்துவ ஆக்ஸிஜனின் சராசரி உற்பத்தி 1,308 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஏப்ரல் 17 அன்று நிலவரப்படி அது 7,755 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. அதில் 4,739 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது, மீதமுள்ளவை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டன. இதனை 6,000 மெட்ரிக் டன்னாக இந்த வார இறுதிக்குள் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தவிர, 50,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தியும் விரைவில் தொடங்க உள்ளது.