பழங்குடியினர் கட்டாய மதமாற்றம்

மத்திய பிரதேசத்தில் தமியா தொகுதியில் உள்ள பழங்குடியினர் சமூகத்தை மிஷனரிகள் கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்துகிறார்கள். மிஷனரிகள் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் கிராமத்தில் நுழைந்து அப்பாவி பழங்குடியின மக்களை கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கி கிறிஸ்துவ மதத்திற்கு அவர்களை மாற்றுகிறார்கள். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் தொகுதியான மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரினையடுத்தே இந்த சம்பவம் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. அந்த புகாரில் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாகும் நபர்களுக்கு பெருந்தொகை தருவதாக மிஷனரிகள் ஏமாற்றுவதாகவும் இத்தகைய கட்டாய மதமாற்றங்களும், மறுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மருத்துவ சிகிச்சை முகாம் என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இந்த கட்டாய மதமாற்றங்கள் சங்ககேரா, டெல்காரி, ஜாபியா, பரசோம்ரி, தமியா தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் மிஷனரிகள் மூலம்  நடத்தப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.