தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000

சிக்கிம் மாநிலத்தின் மெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் பி.எஸ். தமாங்க், ‘சிக்கிம்மில் உள்ள வேலை பார்க்காத தாய்மார்களுக்கு, ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் (மாதம் சுமார் 1,666) வழங்கப்படும். அந்த பணம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். மாநில வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவருக்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும். இதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படிக்கும் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் இலவசமாக ‘சானிடரி நாப்கின்’ வழங்கப்படும். இத்திட்டங்களுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார். தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசின் காதில் இது விழுகிறதா?