விமான டிக்கெட் முன்பதிவு: சேவை கட்டணம் தள்ளுபடி

‘ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், விமான டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு, 27ம் தேதி வரை அதாவது, இன்றும், நாளையும் சேவை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும், ஐ.ஆர்.சி.டி.சி., நாளை தன், 24வது நிறுவன தினத்தை கொண்டாடுகிறது. மேலும், சர்வதேச சுற்றுலா தினமும் வருவதால், பயணியருக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மற்றும் செயலி வாயிலாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவை கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இன்றும், நாளையும் மட்டுமே, இந்தக் கட்டண தள்ளுபடி பொருந்தும். இந்த சேவை கட்டண தள்ளுபடி மட்டுமின்றி, பல்வேறு வங்கிகளின், ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் வாயிலாக பரிவர்த்தனை செய்தாலும், 2000 ரூபாய் வரை சேமிப்பு பெற முடியும்.

இந்த சலுகையானது, தங்கள் பயணத்தை, 100 நாட்களுக்கு முன்பே திட்டமிட்டு உள்ளவர்கள், பண்டிகை காலத்தில் விமானத்தில் பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவியாக இருக்கும்.

www.air.irctc.co.in என்ற இணையதளத்தில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும், ஒவ்வொரு விமான டிக்கெட்டுக்கும், 50 லட்சம் ரூபாய் வரை பயண காப்பீடும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.