எப்.சி.ஆர்.ஏ என்ற வெளிநாட்டு நிதி பறிமாற்றத்தில் விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ), உள்துறை அமைச்சகத்திற்கு அளித்துள்ள ஒரு புகாரில், கொல்கத்தாவை சேர்ந்த பராக்போர் டயோசிசன் கவுன்ஸில் என்ற அமைப்பு, கிண்டெர்னோதில்ஃப் ஜெர்மனி என்ற வெளிநாட்டு அமைப்பிடமிருந்து ரூ. 1.13 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. குழந்தைகளை பாலியல் தொழிலில் இருந்து காப்பதாக புகைப்படங்களைக் காட்டி, வெளிநாட்டினரிடம் இருந்து மோசடியாக நிதி வசூலித்து அதைக் கொண்டு குழந்தைகளை ஏமற்றி பைபிள் வகுப்புகள் நடத்தி அதன் மூலம் கட்டாய மதமாற்றம் செய்வதற்கும், பல புதிய சர்ச்சுகளை கட்டுவதற்கும் இந்த நன்கொடைகள் பயன்படுத்துவதாக எல்.ஆர்.ஓ குற்றம் சாட்டியுள்ளது. விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.