குறைந்த பயங்கரவாத தாக்குதல்கள்

உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில், ஜம்மு காஷ்மீரில் 2018 முதல் ஊடுருவல்களும் பயங்கரவாத சம்பவங்களும் குறைந்துள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் 31’வரை 28 ஊடுருவல் சம்பவங்கள் நடந்துள்ளன. இது முறையே, 2020ல் 51, 2018ல் 143, 2017ல் 141 என இருந்தன. இந்த ஆண்டு நவம்பர் 21 வரை 200 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றன. இது, 2020ல் 244, 2019ல் 255 மற்றும் 2018ல் 417 என பதிவாகியுள்ளன. இதேபோல, இடதுசாரிகளால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இறப்புகள், 2010ல் 1,005 ஆக இருந்தது. 2020ல் அது 183 ஆக 80 சதவீதம் குறைந்துள்ளது. இடதுசாரி வன்முறைகள் 2013ல் 10 மாநிலங்களில் 76 மாவட்டங்களாக இருந்தது. இது தற்போது, ஒன்பது மாநிலங்களில் 53 மாவட்டங்களாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.