தடைசெய்யப்பட்ட முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான ஜமாத் இ இஸ்லாமியின் ஒரு கிளையான ஃபலாஹ் இ ஆம் அறக்கட்டளை நடத்தும் ஏழு பள்ளிகளையும் அடுத்த 15 நாட்களுக்குள் மூட வேண்டும். அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பெரிய சட்ட விரோத செயல்கள், வெளிப்படையான மோசடிகள் மூலம் அரசு நிலங்களையும் துப்பாக்கி முனையில் தனியார் நிலங்களை ஆக்கிரமித்தும் இந்த பள்ளிகள் கட்டப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. புல்வாமாவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு ஜமாத் இ இஸ்லாமியை கடந்த 2019ல் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.