இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் மமதா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.கவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்றார். இதனால் 6 மாதங்களில் அவர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராகத் தொடரமுடியும் என்ற நிலையில் பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். பவானிபூரில் பா.ஜ.க அமைப்புரீதியாக பலவீனமாக இருந்த போதிலும், துணிந்து போட்டியிட்டது. பாஜகவின் பிரியங்கா திப்ரேவால் 26,428 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இதற்கு, முன்பு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் முடிவுகளின்போது திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்கள், அதனால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஹிந்துக்களின் வாழ்வில் ஏற்பட்ட மறக்கமுடியாத வடு, அப்பகுதியை சேர்ந்த உண்மையான வாக்காளர்கள் தற்போது வாக்களிக்க அனுமதிக்கப்படாதது, போலி வாக்காளர்களின் உதவி போன்றவையே மமதா பானர்ஜி வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என குற்றம் சாட்டியுள்ளார் பிரியங்கா திப்ரேவால்.