போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு 125 கேள்விகள் என்ற இந்து முன்னணியின் புத்தகத்தில் இருந்து

  1. மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், அப்துல் ரஹ்மான் அந்துலே என்பவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டது போல, ஒரு மசூதியிலோ, மதரஸாவிலோ ஒரு ஹிந்து – (முலாயமோ, லாலுவோகூட) அறங்காவலராக முடியுமா?
  2. டாக்டர் பிரவீண் தொகாடியா சின்னச் சின்ன காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார். பாரதப் பிரிவினை கேட்ட பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் ஏஜெண்ட் என்று தன்னை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட டில்லி ஜூம்மா மசூதியின் இமாம் அகமது புகாரி ஏன் கைது செய்யப்படவில்லை?
  3. ஐ.எம்.டி.டி. (I.M.T.D) சட்டப்படி வங்க தேச முஸ்லீம்கள் இந்தியக் குடியுரிமை பெற்று அஸ்ஸாமில் நிரந்தரமாக வசிக்கலாம். ஆனால் இந்தியர்கள் ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிக்க முடியாது. ஏன் இந்த இரட்டை வேடம்?
  4. 2003-2004ல், ஒரு முஸ்லீம் ஜனாதிபதி, ஒரு ஹிந்து பிரதம மந்திரி, ஒரு கிறிஸ்தவ ராணுவ மந்திரி ஆகியோர் இணைந்து இந்த நாட்டைக் கருத்தொருமித்து வழி நடத்தினர். ஹிந்து நாடான பாரதத்தைத் தவிர வேறெங்காவது இது நடக்க முடியுமா?
  5. கேரளாவில், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாவின் பெயராலும், குழந்தை ஏசுவின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். (இது சட்ட விரோதமாகும்). இந்துக்கள் ராமனின் பெயராலும், கிருஷ்ணனின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள முடியுமா?
  6. அரசாங்கச் செலவில் அரேபிய மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் சமஸ்க்ருதத்திற்கு எந்த ஊக்குவிப்பும் கிடையாது. சமஸ்க்ருதத்தைக் காட்டிலும், அரேபிய மொழி என்ன தேசியத் தன்மை அதிகம் கொண்டது?
  7. ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு அரசு மானியம் வழங்கும் பொழுது, அமர்நாத், சபரிமலை, கைலாஷ் மானசரோவர் செல்லும் ஹிந்து யாத்ரீகர் கள் மட்டும் ஏன் கூடுதலாகப் பணம் வரியாக செலுத்த வேண்டியுள்ளது?
  8. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கோடி ஜனத்தொகைக்கு ஆண்டுதோறும் ரூபாய் 24,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. அதாவது ஒருவருக்கு ரூ. 2,400. ஆனால் மற்ற மாநிலங்களில் இதில் ஐந்து சதவீதம்கூட வழங்கப்படுவதில்லை. இது தேச விரோத நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுகின்ற பரிசுதானே?
  9. ஓவியம் வரைதல் இஸ்லாமுக்கு எதிரானதென்றால், எம்.எஃப். ஹுசைனுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை? அவர் தொடர்ந்து ஓவியம் தீட்டினாரே, அவர் இஸ்லாமிற்கு எதிராகச் செயல்பட்டதாகத் தானே அர்த்தம்?
  10. இசைபாடுவது, ஆடுவது ஆகிய அனைத்தும் இஸ்லாமிற்கு எதிரானது. (ஏனென்றால், இஸ்லாம் ஒரு தீவிரமான மதம்). அப்படியென்றால் சினிமாத்துறையில் உள்ள பல ‘கான்’களுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை? பிரச்னை வரும்போது அவர்கள் எதைத் தியாகம் செய்வார்கள் – இஸ்லாமையா? நடிப்பையா?

 

தொடரும்…