ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தில் கொத்தபள்ளம் என்ற ஊரில் ‘பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச்’ என்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ‘ஆனந்த் பால்’ என்ற மதபோதகர், ஏழை மக்களுக்கு நிதியுதவி செய்வதாகக் கூறி சதி வலையில் வீழ்த்தி மதமாற்றம் செய்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினரை ‘பொய்யாக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் அளித்து உள்ளே தள்ளிவிடுவோம்’ என மிரட்டுகிறார். இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவாக முன்னாள் டி.ஐ.ஜி உட்பட கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேர் துணையாக உள்ளனர் என கிராமத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மதபோதகர் ஆனந்த் பால், தான் ஒரு கிறிஸ்தவர், கடந்த 10 ஆண்டுகளாக மத போதனை செய்து வருகிறேன் என ஒப்புக் கொண்ட பின்னரும், அவர் அளித்த வன்கொடுமை புகாரை காவல்துறை பதிவு செய்தது தவறு. ஆனந்த் பால், அவரால் மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களின் எஸ்.சி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரியுள்ளனர். ஏற்கனவே, வெளிநாட்டு பண பரிமாற்ற முறைகேடு புகாரில் இந்த கிறிஸ்தவசபையை அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.