ஆர்.டி.ஐ’யில் வெளியான உண்மை

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அதன் முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே ஷைலஜா, கொரோனா பாதுகாப்பு உடைகள் (பி.பி.இகிட்) வாங்குவதற்கு அதிக செலவு செய்ததற்காக எதிர்க்கட்சிகள் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தின. அனைத்தும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நிதியமைச்சருக்கும் தெரிந்தே நடந்தது என ஷைலஜா கூறினார். இவை சர்ச்சைக்கு உள்ளானதால் கேரளாவில் இடதுசாரி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றபோது, ஷைலஜா புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் இது குறித்து தகவல் கோரப்பட்டது. அதில், ‘கேரள  முதல்வர் பினராயி விஜயன், நிதியமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா ஆகியோர் அதிக விலையில் பி.பி.இ கிட்டுகளை வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். மார்ச் 24 முதல் ஏப்ரல் 4, 2020 வரை கொச்சியை சேர்ந்த ஒரு நிறுவனம் பி.பி.யி கிட்டுகளை ரூ. 450க்கு வழங்க முன்வந்தது. எனினும், கேரளா மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் என்ற அரசு நிறுவனத்தின் வாயிலாக ஒரு கிட் ரூ. 1,550க்கு சன் பார்மா நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது.  இதேபோல  என் 95 முகக் ககவசங்கள், கை சுத்திகரிப்பான்கள், ஸ்டெரைல் மற்றும் ஸ்டெரைல் அல்லாத கையுறைகள் போன்ற மருத்துவ உபகரணங்களை மொத்த கொள்முதல் மதிப்பு ரூ. 73க்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டது’ என தெரியவந்துள்ளது.