முக அங்கீகாரத்தை நிறுத்தும் முகநூல்

சமூக ஊடக நிறுவனமான முகநூல் நிறுவனம், முகத்தை அடையாளம் காணும் அதன் அணுகல் முறையை நிறுத்துவதாகவும், இந்த தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்திய சுமார் 1 பில்லியன் “பேஸ் பிரிண்ட்களை” நீக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை அறிவித்த முகநூலின் செயற்கை நுண்ணறிவு பிரிவுத் துணைத் தலைவர் ஜெரோம் பெசென்டி, மக்கள் இனி படங்கள் மற்றும் வீடியோக்களில் தானாக அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார். முகநூலின் இந்த நடவடிக்கை முகத்தை தானாக கண்டறியும் இத்தகைய நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து சமூகத்தில் அதிகரித்து வரும் கவலைகள், நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளுக்கு இடையில் வெளியாகியுள்ளது.