சிட்ரஸ் பழத் தயாரிப்பு ஏற்றுமதி

சிட்ரஸ் வகைப் பழங்கள் மற்றும் அதன் துணைத் தயாரிப்புகளின் ஏற்றுமதிக்கு மத்திய சிட்ரஸ் ஆராய்ச்சி மையம் (ஐ.சி.ஏ.ஆர்) மற்றும் வேளாண் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபேடா) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுறவு ஏற்றுமதியின் பன்முகத்தன்மையை அதிகரிக்கும். வேளாண் தயாரிப்புகளின் ஏற்றுமதியை அதிகரிக்கும். இதன் மூலம் பல்வேறு பாரதத் தயாரிப்புகள் சர்வதேசச் சந்தையை எட்டும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம்  மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து இடையே நாக்பூரில் சமீபத்தில் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதோடு அவற்றை சர்வதேச சந்தையுடன் இணைக்கும், சிட்ரஸ் வகைப் பழங்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும்.