கரூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு, வேட்பாளரை தேர்வு குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இதில் கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியினர் ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி தி.மு.கவினரிடம் முறையிட்டார். இதனையடுத்து கூட்டணி குறித்து பேச நீ யார்? வெளியே போ? என்று தி.மு.கவினர் சிலர் ஒருமையில் பேசியதாக கூறப்ப்படுகிறது. இதனையடுத்து வெளியே வந்த ஜோதிமணி, தி.மு.கவினர் வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா? என்று ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.