குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘நாட்டு நலனுக்காகவும் விவசாயிகளின் நலனுக்காகவும் வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களும் புதிய வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. சிறு விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் கொண்டுவர, அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்கு முன்னதாக அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இச்சட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. இது குறித்து விரிவாக மக்களுக்கு புரிய வைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம். வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடவேண்டும், தங்களின் இல்லத்திற்கு திரும்ப வேண்டும்’ என கூறினார்.