அசாதாரணக் காலகட்டத்தில் புத்தாக்கங்களுக்குத் தலைமை வகிக்கும் பாரதம் என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற வார்டன் இந்தியா பொருளாதாரக் கூட்டமைப்பின் 27வது கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொண்ட கட்டமைப்புச் சீர்திருத்தம் காரணமாகவே, உலகின் முதல் 3 வளர்ந்த பொருளாதார நாடுகளுள் ஒன்றாக பாரதம் முன்னேறியுள்ளது. பொருளதார சீர்திருத்தங்களில் தாக்கங்கள் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. மத்திய அரசின் ஜி.எஸ்.டி மிக முக்கியமான சீர்திருத்தம். உலக நாடுகள் சவாலான சூழலைச் சந்தித்த போதிலும், அண்மைகால ஜி.எஸ்.டி வரிவசூல் மிகவும் வலுவாக உள்ளது. தற்போது மிக நேர்மையான மற்றும் வெளிப்படையானப் பொருளாதாரமாக பாரதப் பொருளாதாரம் திகழ்கிறது. அரசுக்கு வரிச்செலுத்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொண்டு வருகின்றனர். நிதித்துறையில் மேற்கொண்ட தனியார்மயமாக்கல், டிஜிட்டமயமாக்கல் போன்ற சீர்திருத்தங்கள் வணிகத்தை எளிமையாக்கியுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக, உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் 14 துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.