மாணவர்கள் பொதுத்தேர்வு பயத்தில் இருந்து விடுபட தன்னம்பிக்கை அளிக்கும் வகையில், ‘பரீட்சைக்கு பயமேன்’ (pariksha pe charcha) என்ற தலைப்பில், பாரதப் பிரதமர் மோடி, வருடம் தோறும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்காக இவ்வாண்டு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சி, மார்ச் இறுதியில் நடத்தப்பட உள்ளது. ஆன்லைனில் நடக்கும் இக்கலந்துரையாடலில் மாணவர்களுடன் பெற்றோர், ஆசிரியர்களும் பங்கேற்கலாம். இதற்கு, www.innovate india.mygov.in/ppe2021 என்ற இணையதளத்தில் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெறுவோர், தங்கள் கேள்விகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிப்பார். இதில் பங்கேற்க தற்போது வரை,சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களும் விண்ணப்பித்துள்ளனர்.