தாராபுரம் வெற்றி யாருக்கு?
தாராபுரம் என்பது மஹாபாரதத்தில் இருந்த பல வளம் கொழித்த நாடுகளில் விராட மன்னன் ஆண்ட விராட நாட்டின் தலைநகரான விராடபுரமே பின்பு மறுவி தாராபுரம் ஆகிப்போனது. இது மிகப்பழமையான நகரங்களில் ஒன்றானது.
இங்குதான் பாண்டவர்கள் 14 ஆவது வருடத்தில் அஞ்ஞான வாசம் என்று மறைந்திருந்த நாடு. அன்று விராட நாடு மிக செழுமையாக பரந்து விரிந்து இருந்தது. அப்படியிருக்க கௌரவர்கள் விராட மன்னனின் காலநடைகளை ஓட்டி சென்றால், விராட நாட்டில் மறைந்திருந்த பாண்டவர்கள் வெளியே வந்து விராட மன்னனுக்காக போராட முன்வருவார்கள், அப்போது அவர்களை அடையாளம் கண்டுகொண்டால், மீண்டும் 13 வருடம் வனவாசமும், மீண்டும் ஒரு வருஷம் அஞ்ஞான வாசமும் போகவேண்டும். அது கௌரவர்களுக்கு வெற்றி என்று பீஷ்மர் தலைமையிம் போர் தொடுக்க வந்தார்கள்.
அப்படி கௌரவர்கள் திட்டமிட்டபடி விராடர் கால்நடையை ஓட்டி சென்றபோது அதை தடுக்க நத்தக்காடு என்ற இடத்தில் தடுத்து போர் புரிந்தபோது ரத்தம் அங்கு ஆறாக கொட்டியதால் ரத்தக்காடாகியது. அந்த ஊர் பின்பு மறுவி நத்தக்காடு ஆகியது. அது தாரபுரம், காங்கேயம் ரோட்டில், ஊதியூருக்கு அருகில் இன்றும் உள்ளது. அந்த போர் ஆரம்பித்த இடத்தில் ஒரு கோயிலும் உள்ளது.
அடுத்து தொடர்ந்து போர்புரிந்து கொண்டு சென்று கால் நடைகளை தங்கள் ஊருக்கு “திருப்பிய ஊரே” இன்று திருப்பூர் ஆனது. அந்த போரில் அர்ஜுனன் அஞ்ஞான வாசம் முடிந்தபின், போரிட்டு பகைவர்களை பெரிய அளவில் “கொன்ற இடம்” பின்பு மறுவி குண்டடம் ஆகியது. இங்கு வடுகநாதசாமிக்கு பழமையான கோயில் உள்ளது. இந்த கோயிலில், தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தையின் கருவில் இருக்கின்ற குழந்தையின் கல்வெட்டு இருக்கிறது..
மேலும் விராட மன்னரின் மகளைத்தான் அர்ஜுனனின் மகன் அபிமன்யூ திருமணம் செய்து அவர்களுக்கு பிறந்த குழந்தை அபிஜித் பாண்டவர்களின் வாரிசாகி ஆட்சி செய்தார்.
இப்படி மிகச்சிறப்பாக இருந்த நகரம் விராடபுரம் எனும் தாராபுரம் என்பதாகும். அந்த ஊர் அவ்வளவு பழமையானதாக இருந்த போதும் அதன் சாபக்கேடு வளரவேயில்லை.
சுதந்திர இந்தியாவில் அது வளராததிற்கு ஒரு முக்கிய காரணம் அந்த தாரபுரம் தனி தொகுதியாகி, மேலும் முந்தைய பொள்ளாச்சி பாராளுமன்றத்தின் தனி தொகுதி என்று இரண்டுவகையிலும் முக்கியத்துவம் இல்லாமல் போனதால், பேருக்கு யாராவது ஒருவரின் பினாமியை வேட்பாளாரக நிறுத்தி அதிமுகவும், திமுகவும் ஆண்டது. இதுவரை 6 முறை அதிமுக, 5 முறை திமுக, 1 முறை காங்கிரஸ், 1 முறை பாமக வெற்றிபெற்றது. வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றார்களே தவிர, தாராபுரம் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
இப்படி இருக்கும் தாராபுரத்தில் முதல் முறையாக ஒரு நட்சத்திர வேட்பாளராக பாஜகவின் மாநில தலைவர் முருகன் போட்டியிடுகிறார். அதனால் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் ஒரு தொகுதியாக உறுவெடுத்துள்ளது. அதற்கு இன்னொரு காரணம் பாரத பிரதமர் மோடி அவர்கள் முருகனை ஆதரித்து பிராச்சாரத்திற்காக தாராபுரத்தில் முதன் முறையாக மிகப்பெரிய அளவில் மாநாடு நடக்கிறது.
தேர்தலின் ஆரம்பத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுமுன் பாஜகவின் வேட்பாளர் கிட்டத்தட்ட ஒரு 20,000 வாக்கு வித்தியாசத்தில் திமுகவிடம் தோல்வியுறுவார் என்ற நிலையே அங்கு இருந்தது. அதற்கு காரணம் திமுகவிற்கு இங்கே மிகச்சிறந்த தொண்டர் படையும், ஆர்கனைஸ்டு பிரச்சார யுக்தியும் இங்கு அவர்களிடம் காலம் காலமாக இருந்தது. அதன் வலு முன்பைவிட இன்று பெரிதளவில் குறைந்திருந்தாலும் மற்ற கட்சிகளை ஒப்பீடு செய்தால் திமுகவிற்கு வலுவான தேர்தல் பணிமனை அவர்கள் கைகளை இங்கு உயர்த்தியது.
ஆனால் முருகனின் வேட்பு மனு தாக்கலின் போது கூடிய கூட்டத்தில், அது பெரிய அளவில் மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பெரிய அளவில் இங்கே பாஜகவின் தொண்டர்கள் திரள, அதன் வித்தியாசம் சரிய தொடங்கியது.
மேலும் திமுக தன் வேட்பாளரை அறுவித்ததும் அதன் சரிவு மேலும் உறுதியானது. காரணம் திமுக வேட்பாளர் ஒரு தெய்வ நம்பிக்கையற்ற திக காரர் மட்டுமல்ல், இந்துக்களின் நம்பிக்கையை தாலி அறுப்பு போன்ற போராட்டம், கந்தர் கஷ்டி கவசத்தை இழிவு படுத்தியதற்கு ஆதரவு போன்றதன் மூலம் கொச்சைப்படுத்திய அவரை அறிவித்த போது பெருவாரியான இந்துக்களை மேலும் கோபப்படுத்தியது. ஏற்கனவே தாரபுரம் முதல் கோவில்பாளையம் வரை பல ஊர்களில். RSS 80 களில் இருந்தே ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக உள்ளது. அதனால் ஆரம்ப கால இந்துக்களின் வாக்கு வங்கி உறுவான தொகுதிகளில் இதுவும் ஒன்று.
அப்படியிருக்கு திமுக வேட்பாளரின் திக ஈடுபாடுகள் பொது மக்களை ஏற்கனவே முகம் சுழிக்க வைத்தது. அது மேலும் பாஜக இளைஞர்களின் பிரச்சாரத்தின் சோஷியில் மீடியா மூலம் பலமாக இருந்த எதிர்ப்பு திமுகவின் வெற்றியை பதம் பார்த்தது. பிரச்சினையின் ஆழத்தையும், தொகுதியின் மன நிலையை அறிந்த திமுக வேட்பாளர் தன் எதிர் பிம்பத்தை மாற்ற கோயில் அர்ச்சனை செய்து வேட்புமனு செய்வது போன்ற அந்தர்பல்டி அடித்தார், ஆனால் அந்த நாடகம் தேர்தலுக்கான அவரின் ஒப்புதல் வாக்குமூலமாகவே பார்க்கப்பட்டது.
அப்படியிருந்தும் திமுக தன் வலிமையான அணியின் பிரச்சாரத்தை கட்டமைப்பின் மூலம் செய்யத்தொடங்கியது. ஆனால் அதற்குள் பல ஊர்களில் இருந்து குவிய தொடங்கிய பாஜக தொண்டர்களின் கூட்டத்தில் திமுகவின் இருப்பு கரைந்து காணாமலேயே போய் விட்டது எனலாம்.
இருந்தும் தேர்தல் நேரத்தில் நடக்கின்ற பண பட்டுவாடாவில் திமுகவின் கை ஓங்கிவிடும், ஏனெனில் பாஜக ஓட்டுக்கு துட்டு என்பதை செய்யாது என்றதொரு நம்பிக்கையை திமுக கடைசி ஆயுதமாக நம்பியிருந்தது. ஆனால் அதுவும் அதிமுக தன் கூட்டணி கட்சிக்காக திமுகவை சரி செய்யும் பணியை செய்யத்துவங்கிவிட்டது என்றதும் திமுகவின் கரம் தாளத்துவங்கிவிட்டது என்ற சொல்வதைவிட வீழத்துவங்கியது என்பது பொருத்தமாகும்.
இதை எல்லாம் மீறி பாஜக உயர் ஜாதி கட்சி என்று ஒரு மாயையை ஏற்படுத்த நினைத்த திமுகவிற்கு முருகனே தாழ்த்தப்பட்டவர் என்ற நிலையில் தெலுங்கில் பேசி, தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் சகஜமாக நுழைய, அட நம்ம மனவாடு என்ற சக மொழி, திமுகவை கலகலக்க வைத்துவிட்டது. இப்போதைக்கு முருகனின் வெற்றி உறுதி என்ற நிலையில் அதை பெரும் வெற்றியாக மாற்ற கட்சியும் கூட்டணியும் முயல இப்போது மேலும் பலத்தை காட்ட திமுக பம்முகிறது.
அமராவதி காவிரியின் கிளை நதியாகி அத்தோடு கலந்தபின் அடையாளம் தெரியாமல் போன இந்த ஊருக்கு மானில பாஜக தலைவர் என்ற அடையாளமும், மோடியின் வருகையும், விராட நாட்டின் சரித்திரத்தை திருப்பி போடுகிறதோ என்ற சந்தேகத்தில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
வெற்றி நடையை நோக்கி!