கேரளாவில் 1921ல் முஸ்லிம்கள், ஹிந்துக்கள் மீது நடத்திய கொடூர படுகொலைகள், கற்பழிப்புகள், மதமாற்றங்கள் மாப்ளா கலவரம் என அழைக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. இந்த கொடூர ஜிஹாத்தில் தலைமை வகித்த வரியம்குன்னத் குன்ஹமத் ஹாஜி மற்றும் அலி முசலியார் உள்ளிட்ட முஸ்லிம் பயங்கரவாதத் தலைவர்கள் சுதந்திர போராட்டத் தலைவர்களாக சுதந்திர போராட்ட வீரர்களின் அகராதியில் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ‘தற்போது, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலால் (ICHR) வெளியிட்டுள்ள இந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அகராதி புத்தகத்தின் 5வது பதிப்பில் பழைய தவறுகளைத் திருத்த அந்த அமைப்பின் குழு பரிந்துரைத்துள்ளது’ என ICHR’ன் ஆராய்ச்சி, நிர்வாகப் பிரிவு இயக்குனர் ஓம் ஜீ உபாத்யாய தெரிவித்துள்ளார்.
மேலும், ‘இந்த படுகொலைகள் மத மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாத இயக்கம் நிகழ்த்தியது. எவ்வகையிலும் இது சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி அல்ல. அக்குழுவினர் மாப்ளா படுகொலைகள் மூலமாக ஒரு கலிபாவை நிறுவ முயற்சித்தனர். அவர்கள் அம்முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால், பாரதம் அன்றே அப்பகுதியை இழந்திருக்கும். அப்போது ஷரியா நீதிமன்றத்தை நிறுவிய அவர்கள் ஏராளமான ஹிந்துக்களை படுகொலை செய்தனர். சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியல் இதற்கேற்ப மாற்றப்படும். புதுப்பிக்கப்பட்ட அகராதி அக்டோபர் இறுதிக்குள் வெளியிடப்படும்’ என தெரிவித்தார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பு, கேரள சட்டசபை சபாநாயகர் எம்.பி ராஜேஷ், வரியம்குன்னத் குன்ஹமத் ஹாஜியை பகத்சிங்குடன் ஒப்பிட்டு பேசினார். இதனையடுத்து அவர் மீது தேசத் துரோக வழக்கை பதிவு செய்ய பா.ஜ.க கோரியது நினைவிருக்கலாம்.