ஆதித்திய பிர்லா குழுமத்தின் ஒரு பிரிவான ‘அல்ட்ராடெக்’ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்குதாரர்களிடம் உரையாற்றிய அக்குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ‘கொரோனாவால் நிச்சயமற்ற நிலை இன்னும் நீடித்து வந்தாலும், நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. அது மூன்றாவது அலையை எதிர்ப்பதற்கான சூழலை மேம்படுத்தியுள்ளது. நமது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால், பொருளாதார குறியீடுகள் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துஉள்ளன. பணி செய்யும் முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல விஷயங்கள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன’ என கூறியுள்ளார்.