நாடாளுமன்றத்தில் 2023ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2023 மற்றும் 2024ம் நிதியாண்டில் பாரதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு 2023 கணித்துள்ளது. மேலும், அதில், கொரோனா காலகட்டத்தில் நெருக்கடி மேலாண்மையில் முகக்கவசங்கள் தயாரிப்பது உள்ளிட்ட சுய உதவிக் குழு பெண்களின் பங்களிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 4 ஜனவரி 2023 நிலவரப்படி, 16.9 கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் பாரதத்தின் விவசாயத் துறை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதமான 4.6 சதவீதத்துடன் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை பெருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், குறைந்தபட்ச ஆதரவு விலை பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உறுதியான வருவாயை உறுதி செய்வதே இந்தத் துறையின் வளர்ச்சி என்று கூறப்பட்டுள்ளது. கடன் கிடைக்கும் தன்மை, இயந்திரமயமாக்கலை எளிதாக்குதல் மற்றும் தோட்டக்கலை மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் இவைகள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான கமிட்டியின் பரிந்துரைகளின்படி உள்ளது.
2021 தரவுகளின்படி, நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். 47 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கின்றனர். எனவே, கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்காக கிராமப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசின் முக்கியத்துவம் உள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சி.ஏ.டி) அதிகரித்து வருகிறது. உலகளாவிய பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதால் சி.ஏ.டி தொடர்ந்து விரிவடையும் என்று ஆய்வு கூறுகிறது. மேலும் விரிவடைந்தால், அது ரூபாயின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரதத்தில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் இரண்டுக்கும் மத்தியிலான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேவேளையில் இறக்குமதிக்கு டாலரில் பேமெண்ட் செலுத்தப்படும் வேளையில், டாலர் அதிக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு சரியும். 2023ம் நிதியாண்டில் இந்த நிலை மோசமாகும் என பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுநோய் அதிர்ச்சியிலிருந்து பாரதம் வேகமாக மீண்டு உள்ளது. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி உறுதியான உள்நாட்டு தேவை, மூலதன முதலீட்டின் மூலம் அதிகரிக்கும். பாரதத்தின் வளர்ச்சி வலுவான அடிப்படைகள் மூலம் தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. அடுத்த நிதியாண்டில் நாமினல் ஜி.டி.பி அளவு 11 சதவீதம் வளரும் என்று எதிர்பார்க்கிறது.
நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் மூலதன செலவின இலக்கான 7.5 லட்சம் கோடி ரூபாயை எட்ட வாய்ப்புள்ளது. மத்திய அரசு முதலீடுகளுடன், அரசு தனியார் முதலீடுகளையும் ஊக்குவித்து வருகிறது. கடந்த ஆண்டின காட்டிலும் மூலதன செலவினங்களை மத்திய அரசு 63.4 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் தனியார் முதலீடுகளும் கணிசமான உயர்ந்துள்ளது. தற்போதைய நிலை தொடருமானால் அரசின் இலக்கு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களில் தனியார் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்ற நிலையில் அவற்றின் இருப்பு நிலை அதிகரிக்கலாம். இது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையலாம். பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். அன்னிய முதலீடுகளுக்கு பல்வேறு ஊக்கச் சலுகைகளையும் அரசு அறிவித்து வரும் நிலையில், வரவிருக்கும் ஆண்டிலும் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.