பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு

ஆந்திர மாநிலத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, கல்வி வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர்களுக்கு ஏற்கனவே கல்வியில் இந்த ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. அது தற்போது வேலை வாய்ப்புக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர் என எந்த பிரிவிலும் இடஒதுக்கீடு பெறாத, ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் இப்பிரிவில் இடஒதுக்கீடு பெற முடியும் என அம்மா நில அமைச்சர் குரசல கண்ண பாபு தெரிவித்துள்ளார்.