இ சஞ்சீவனி

மத்திய அரசின் சுகாதாரத்துறை கடந்த வருடம் துவக்கிய இ சஞ்சீவனி என்ற இலவச தொலைதூர மருத்துவ சேவை இதுவரை ஒரு கோடி நோயாளிகளுக்கும் அதிகமாக சேவை செய்துள்ளது. இதன் வளர்ச்சி மாதத்திற்கு 1,000 மடங்கு என்ற அளவிலும் தினம்தோறும் 75,000 நோயாளிகளுக்கு ஆலோசனை என்ற அளவிலும் தொடர்கிறது. இதில் பயன்பெற்ற மாநிலங்களில் முதல் இடத்தில் 27.51 லட்சம் பயனாளர்களுடன் ஆந்திர பிரதேசமும், 19.39 லட்சம் பயனளிகளுடன் இரண்டாம் இடத்தில் கர்நாடகமும், தமிழகம் 14.76 லட்சம் பயனாளர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.