இ-காமர்ஸ் எனப்படும் மின்னணு வணிகத்தில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020ல் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நியாயமற்ற வர்த்தகம், மோசடிகள், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றை தடுக்க இந்த மேம்பாடுகள் செய்யப்படுகின்றன. மேலும், குறைதீர் அதிகாரி நியமனம், வர்த்தகப் பதிவு எண் பெறுதல், பொருட்கள் குறித்த தவறான சித்தரிப்பு தடுப்பு, உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம், சேவைக் குறைபாடு தடுப்பு உள்ளிட்டவைகளும் இந்த சீர்திருத்தங்களில் இடம் பெறுகின்றன.