கேரளாவில் சமீபத்தில் ஒரு பாதிரி, போதைப்பொருள் ஜிஹாத் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த சூழலில், தற்போது முஸ்லிம்கள் தங்கள் போதைப்பொருள் ஜிஹாத் தொழிலில் முஸ்லீம் அல்லாதவர்களை சேர்க்க முயற்சிக்கின்றனர் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன், பெங்களூரிலிருந்து போதைப்பொருட்களை கடத்திவந்த நௌஷத், ஸ்ருதி, யது ஆகிய மூன்று போதைப்பொருள் விற்பனையாளர்கள் கேரள கர்நாடக எல்லையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ .10 லட்சம் மதிப்புள்ள எம்.டி.எம் ஏ வகை போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. யது, ஸ்ருதி இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஐ.டி பூங்காவில் பணிபுரிகின்றனர். இதேபோல, கொச்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எல்.எஸ்.டி, எம்.டி.எம் ஏ வகை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது அஜ்மல், பைசல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவை சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.