ஒடிசாவின் சந்திபூரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓவின் ஏவுகணைகள் உள்ளிட்ட பாதுகாப்புத் தளவாடங்களை சோதிக்கும் ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் (ஐ.டி.ஆர்) ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்த நால்வரை ஒடிசா ஐ,ஜி ஹிமாசு லால் தலைமையிலான காவல்துறையின் சிறப்புக் குழு கைது செய்தது. முதற்கட்ட விசாரணையில் இந்த ஒப்பந்தப் பணியாளர்கள் சோதனை மையத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புடன் முகநூல், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டதும் அதற்காக பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது. ‘அவர்களின் உரையாடல்கள், நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்த பின்னரே கைது செய்தோம். அந்த நால்வருடன் தொடர்புடைய மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என ஹிமாசு லால் தெரிவித்தார்.