தனது அரசியல்வாதி வாடிக்கையாளர்களை ஜெயிக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் பிரசாந்த் கிஷோர். ஹிந்து விரோதிகளான இவரது வாடிக்கையாளர்களின் போலி வேஷம் மக்கள் மன்றத்தில் கலைந்து வருவதால் அவர்களின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என்பதால், பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம் தன் பிரச்சார வியூகங்களை மாற்றியமைத்து வருகிறது. ஆனால், இது எடுபடுமா?
2018ல், காங்கிரஸ் தலைவரான ராகுல், கோயில்களுக்கு சென்றது போன்ற புகைப்படங்களை அவரது டிவிட்டரில் பதிவிடவைத்தார் கிஷோர். அதற்கு எதிர்ப்பு வரும்போது, ராகுல் ஒரு சிவபக்தர் என்றார். அடுத்த முயற்சியாக ராகுல், புஷ்கரில் ஒரு கோயில் விஜயத்தின்போது, அவருக்காக அர்ச்சனை செய்யப்பட்டபோது, தனது கோத்திரத்தை தத்தாத்ரேய கோத்திரம் என்றும் தான் ஒரு காஷ்மிரி கவுல் பிராமணன் என்றும் கூறினார். ஆனால் அவரது தாத்தா பெயர் பெரோஸ் கான் எனும்போது அவருக்கு எப்படி தத்தாத்ரேய கோத்திரம் வரும்?
அடுத்ததாக, முஸ்லிம் ஆதரவாளரான மேற்கு வங்க முதல்வர் மமதாவின் வெற்றி வாய்ப்பு ஹிந்து எதிர்ப்பால் பறிபோகும் என்று தெரிந்தவுடன், மமதாவை ‘சண்டி பாத்’ என்ற மந்திரத்தை மேடையில் சொல்ல வைத்து தானும் ஒரு ஹிந்து என அறிவிக்க வைத்தார். அப்போதும் மமதா போணியாகாததால் சமீபத்தில் ‘எனது இரண்டாவது பிரச்சாரத்தின்போது, ஒரு கோயிலுக்குச் சென்றேன், அங்கு பூஜாரி, என்னிடம் கோத்திரத்தை கேட்டார். நான் அவரிடம் மா மாத்தி மனுஷ் (கட்சி கொள்கை)தான் என் கோத்திரம் என சொன்னேன். ஆனால். நான் உண்மையில் சாண்டில்யா கோத்திரத்தை சேர்ந்த பிராமணர் என மமதாவை கூறவைத்து ஓட்டுக்காக ஹிந்துக்களின் காலில் விழ வைத்தது ஐ-பேக் டீம்.
இதேபோல, தமிழகத்தில், ஏற்கனவே ஹிந்து விரோதிகள் என பெயர் பெற்ற தி.முக, அதன் ஆதரவளார்களான வைரமுத்து, கருப்பர் கூட்டம், திருமாவளவன், வீரமணி, எஸ்ரா சற்குணம் போன்றோரும், மகன் உதயநிதி, குடும்ப நபர்களான கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் மேலும் ஆ. ராசா போன்ற சொந்த கட்சியினரின் சமீபகால பேச்சாலும் செயலாலும் இவர்கள் ஹிந்து எதிர்ப்பாளர்கள் என்பதை மக்களுக்கு முற்றிலுமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால், ஸ்டாலின் எளிதாக வெற்றி பெறுவார் என்ற நிலை மாறி, வெற்றி பெறுவாரா என்ற சந்தேகம் எழ ஆரம்பித்தது.
இதனை மறைத்து ஹிந்துக்களை ஏமாற்றி ஓட்டை வாங்குவதற்காக, வழக்கம்போல தன் மனைவியை கோயில் கோயிலாக சுற்ற வைத்தார் ஸ்டாலின். இது போதாதென்று தானும், தன் குடும்பமும், தன் கட்சியினரும், தோழமைக் கட்சியினரும்கூட கையில் வேல் வாங்குவது, தேர்தல் அறிக்கையில் ஹிந்து கோயில்களுக்கு நிதி அறிவிப்பது என பிரசாந்த் கிஷோரின் ஆணைப்படி, பல வழிகளில் தன்னை ஹிந்து ஆதரவாளராக காட்ட முனைந்துள்ளார் ஸ்டாலின்.
நரியின் தந்திரம்போல பல தந்திரங்கள் செய்து, ஹிந்துக்களின் ஓட்டைக்கவர காத்திருக்கிறது இந்த கும்பல்.
ஹிந்துக்களே இதற்கெல்லாம் நாம் ஏமாறப்போகிறோமா?