ஆயுர்வேத மருத்துவர்கள் 281 பேர், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கண்ணீர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், நீண்ட நாட்களாக, மகாராஷ்டிரா அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது. தங்களை தரக்குறைவாக நடத்துவது போன்றவை தங்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால், தாங்கள் தற்கொலை செய்துக்கொள்ள மகாராஷ்டிர அரசு, அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் அம்மாநிலத்தின் தொலைதூர கிராமங்களில் பணியாற்றும் BAMS படித்த மருத்துவர்கள். அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு வரும் நோய்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, பாம்பு, தேள் கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இவர்கள் கொரோனா காலத்தில் மிக சிறப்பாக அக்கிராமங்களில் பணியாற்றி நோய்தடுப்பு பணிகளை செய்தனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 40,000 தரப்படும் என அம்மாநில அரசு உறுதி அளித்தது ஆனால், இன்றுவரை அதனை அளிக்கவில்லை. ரூ. 24,000 மட்டுமே அந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.