ஒமைக்ரான் பீதி வேண்டாம்

எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர் ரந்தீப் குலேரியா, டெல்டாவை விட தீவிரம் குறைவாக உள்ளதால், ஓமிக்ரானைப் பற்றி மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன் ஒமிக்ரான் நோயாளிகளை அதன் குறுகியகால மீட்பு நேரம் காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓமிக்ரான் மாறுபாடு நுரையீரலை விட மேல் சுவாசக் குழாய் மற்றும் காற்றுப் பாதைகளையே அதிகம் பாதிக்கிறது. இதனால்தான் ஒமிக்ரான் நோயாளிகளிடம் ஆக்சிஜன் குறைவு உள்ளிட்ட பிற கடுமையான டெல்டா நோய் அறிகுறிகளை நாம் அரிதாகவே காணமுடிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.