ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம் 60 சதவீத மத்திய அரசின் பங்களிப்பில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கான தமிழக அரசின் விளம்பரத்தில், முன்னாள் முதல்வரின் படமும், இந்நாள் முதல்வரின் படமும் அட்டையில் இடம்பெற்றுள்ளது. முக்கியமாக இடம்பெறவேண்டிய பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை. மத்திய அரசின் திட்டங்களை மறைப்பது, அதன் திட்டங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதை தான் தி.மு.க அரசு தொடர்ந்து செய்து வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 4 வருடங்களில், 54.48 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்கியதற்கு மத்திய நரேந்திர மோடி அரசால் ரூ. 1106.56 கோடிகள் செலவிடப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக பயன்பெற்ற மாநிலம் நம்முடைய தமிழகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.