தகவல்தொழில்நுட்ப பணிகளுக்காக தாய்லாந்திற்கு சென்ற 50 தமிழர்கள் மியான்மரில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்தனர். தங்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக கூறிய அவர்கள், 50 தமிழர்கள் உள்பட 300 பேர் மியான்மரில் சிக்கித் தவித்தப்பதாகவும் தங்களை மீட்க கோரியும் வீடிய வெளியிட்டனர். வீடியோ இணையத்தில் பரவியது. மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது மிகக் கடினமான, சவாலான பணி. ஏனெனில் அந்த இடம் மியான்மர் தான் என்றாலும் மியான்மர் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, உலக நாடுகள் பலவற்றால் தேடப்படும் சீன கொள்ளைகூட்ட கும்பல் ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. அதன் பாதுகாப்பு அக்கூட்டத்தில் உள்ள முன்னாள் சீன ராணுவ வீரர்கள் கைகளில் உள்ளது. இதனால் அது மியான்மர் ராணுவத்தாலும் நெருங்க முடியாத பகுதி. எனினும், மத்திய அரசு இதில் சாதூர்யமாக செயல்பட்டு மியான்மரில் சிக்கித் தவித்த 14 பேரை மீட்டு கொண்டு வந்துள்ளது. இதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசின் கடும் முயற்சியால் சென்னை திரும்பிய அவர்களை விமான நிலையத்தில் தி.மு.க அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்த்தார். அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், ‘மியான்மரில் சிக்கியுள்ள அனைத்து தமிழர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறி மத்திய அரசின் முயற்சியில் மறக்காமல் தி.மு.கவின் ஸ்டிக்கரை ஒட்டினார். முன்னதாக இதேபோல மத்திய அரசு முயற்சியால் உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் முன்னதாக, இதேபோல விவகாரத்திலும் இதேபோல இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது நினைவிருக்கலாம்.