கடந்த 2006ல் திமுக தேர்தல் அறிக்கையில் இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக தருவோம் என்று கூறி மக்களை ஏமாற்றியது. அப்பாவி மக்களிடமிருந்து 5,193 ஏக்கர் நிலங்களையும், 35,78,000 சதுர அடி வீட்டுமனைகளையும் திமுகவினர் கபளீகரம் செய்தனர். பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் நில அபகரிப்பு தொடர்பாக 3,264 புகார்கள் வந்தன. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு 5 வருடத்துக்கு முன்பு ஏறத்தாழ 3,678 கோடி ரூபாய் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார்.