கரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘திமுக அராஜகம் செய்யும் ஒரு ரவுடி கட்சி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி. ஸ்டாலினின் மகன் உதயநிதி, டி.ஜி.பியையே மிரட்டியுள்ளார். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் மக்கள் படாதபாடு படுவர். செந்தில் பாலாஜி ஊழல் செய்ததாக கரூரில் ஸ்டாலின் பேசியுள்ளார். இப்போது அவரே செந்தில் பாலாஜிக்கு ஓட்டு கேட்கிறார். தி.மு.கவில் உண்மைக்கு, உழைப்புக்கு, தியாகத்துக்கு இடமில்லை, மரியாதையில்லை. திமுக என்பது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அங்கு செந்தில்பாலாஜி போல யார் வேண்டுமானாலும் சென்று சேர் போடலாம். ஸ்டாலின், முதல்வர் ஆகிவிடுவதாக கனவு மட்டும்தான் காண முடியும்’ என தி.மு.கவை விளாசினார்.
இதேபோல, திண்டிவனம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியபோது, ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க. ஆட்சியில் என்ன நடந்தது என்று சொன்னால் ஒரு மணி நேரம் பேசலாம். தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு இருந்தது. இந்த ஆட்சியில் மின்வெட்டு இல்லை’ என கூறினார்.