ஹிந்துக்களுக்கான கட்சி என கூறிக்கொள்ளும் சிவசேனா, ஆட்சி வெறியில் காங்கிரஸ், என்.சி.பியுடன் இணைந்து ‘மகாவிகாஸ் அகாடி’ என்ற கூட்டணியை அமைத்து ஆட்சியை பிடித்தது. தற்போது, அங்கு அமராவதி மாநகராட்சியில் பா.ஜ.கவின் வேட்பாளர் ஷிரிஷ் ரசானே நிலைக்குழு உறுப்பினராக உள்ளார். அந்தப் பதவியை கைப்பற்ற, சிவசேனா கூட்டணி பகுஜன் சமாஜ் கட்சி, மற்றும் அசாசுதீன் ஒவைசியின் எய்.ஐ.எம்.ஐ.எம் கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதில், பா.ஜ.கவே 9 வாக்குகளுடன் மீண்டும் வெற்றி பெற்றது. சிவசேனா கூட்டணி தோல்வியை தழுவியது. ஒவைசியுடனான சிவசேனாவின் விபரீதக் கூட்டணி, அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.