உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள பில்சார் கிராமத்தில் குப்த பேரரசின் ஆட்சிகால பழங்கால கோயிலின் பகுதிகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் (ஏ.எஸ்.ஐ) கண்டுபிடித்துள்ளனர். ஒரே திசையை நோக்கிய இரண்டு செவ்வக அலங்கார தூண்களைக் கொண்ட படிக்கட்டுகள், அவற்றின் முன் பக்கத்தில் யாகங்கள், கணங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள சங்கலிபி எழுத்துக்களில் அப்பகுதி ‘ஸ்ரீ மகேந்திராதிட்டி’ என்று பொறிக்கப்பட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்தபோது இக்கோயில் குப்த ஆட்சியாளர் குமரகுப்தா 1ன் காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. குப்த ஆட்சியாளர் குமரகுப்தா 1, ஐந்தாம் நூற்றாண்டில் வட மத்திய பாரதத்தை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.