ஜெய்ப்பூரில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய விவசாய போராட்டத் தலைவர் ராகேஷ் திகாயத், ‘தேவைப்பட்டால் நீங்கள் அனைவரும் மீண்டும் ஒருமுறை டெல்லிக்குச் செல்ல வேண்டும், மீண்டும் தடுப்புகளை மீற வேண்டும்’ என்று விவசாயிகளையும் விவசாய ஏஜெண்டுகளையும் தூண்டிவிட்டுள்ளார். சமீபத்தில் தனது அழைப்பை ஏற்று, பேரணிக்கு குறைந்தது 1 லட்சம் விவசாயிகள் வருவார்கள் என கூறியிருந்தார் திகாயத். ஆனால், அதில் ஐயாயிரத்துக்கும் குறைவானவர்களே வந்திருந்தனர். அவரையும் அவரது போராட்டத்தையும் விவசாயிகள் மதிக்கவில்லை, அவர் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்பதையே இது எடுத்துக்காட்டியது. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவர் அறிவித்துள்ள பாரத் பந்த்தும் தோல்வியடையும் என்றே கருதப்படுகிறது.