ஸ்டாலினுக்குத் தெரியுமா மதநல்லிணக்கம்?

மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதையும் ஆராயாமல் எதிர்ப்பது ஒன்றையே குறிகோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது தி.மு.க என்பதற்கு சமீபகால உதாரணமாக வேளாண் சட்டங்களின் உண்மைத் தன்மையை மறைத்து அது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறி, அதற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானத்தை தி.மு.க தலைமையிலான அரசு நிறைவேற்றியது. அதேபோல் நேற்று, சி.ஏ.ஏ எனப்படும் இந்திய குடியுரிமை சட்டம் மத நல்லிணக்கத்திற்கு‌ உகந்ததாக இல்லை என்று கூறி அதனை ரத்து செய்யும் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ‘பாரதத்தில் எந்தவொரு முஸ்லிம்களுக்கும் பாதிப்பு இல்லை. இச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவொரு கருத்தும் இல்லை. மத்திய அரசு, நாட்டின் நலன், பாதுகாப்பு கருதியே பாடுபட்டு கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற ஹிந்து மதப் பண்டிகைக்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். ஆனால், ஸ்டாலின் மட்டும் வாழ்த்து சொல்வதில்லை, ஆனால் அவர்தான் இன்று மத நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறார்!!!’ என தெரிவித்தார்.