ஜனவரி 2018ல் ஸ்ரீ வில்லிபுத்தூரில் வைரமுத்து நிகழ்த்திய உரையில் ஆண்டாள் தாயாரின் சிறப்பைக் குறைக்கும் நோக்கில் சில விஷயங்கள் இருந்தன. இந்த உரை தினமணி நாளிதழில் கட்டுரையாகவும் வந்தது. பக்தர்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்தனர். உலகு தழுவிய போராட்டத்திற்குப் பிறகு தினமணி ஆசிரியர் கே வைத்தியநாதன் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்புக் கேட்டார். ஆண்டாள் பற்றிய பேச்சு, கட்டுரை குறித்து காவல்துறை விசாரணை கூடாது என்று வைரமுத்து தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், காவ்லதுறை வைரமுத்துவை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சதீஷ் குமார் ஸ்ரீனிவாசன் பக்தர்கள் சார்பில் வாதிட்டார். இவ்வழக்கில், உயர்நீதிமன்றத்தில் வைரமுத்துவின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.