மத்திய அரசு உதவி, உதவித்தொகை, விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, உள்ளிட்ட நிதியுதவிகள், அனைத்தும் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகின்றன. மத்திய, மாநில அரசு திட்டங்கள், நகராட்சித் திட்டங்கள் என சுமார் 10,000 சேவைகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நான் டெல்லியில் இருந்து 1 ரூபாய் அனுப்புகிறேன், 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறேன் என்று இப்போது எந்தப் பிரதமரும் சொல்ல வேண்டியதில்லை. கடந்த 8 ஆண்டுகளில் பாரதம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலம் 22 லட்சம் கோடிக்கு மேல் பரிமாற்றம் செய்துள்ளது. உலகில் நடைபெற்ற நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில்40 சதவீதம் 2021ல் பாரதத்தில் நடந்துள்ளது. நாட்டில் சாதனை அளவாக விமான நிலையங்கள், மெட்ரோ கட்டுமானங்கள்,கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்குடன் இணைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்பு, சாலை அமைக்கப்பட்டால் அது மின்சாரத்திற்காகவும் தண்ணீருக்காகவும் தோண்டப்படும். இதை முடிவுக்கு கொண்டு வர, அனைவரையும் ஒரே தளத்தில் கொண்டு வர பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாரதத்தில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர். நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், 100வது சுதந்திர தினத்தின் போது பாரதம் எந்த உச்சத்தில் இருக்கப் போகிறதோ அந்த இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. நாட்டில் மக்களின் வாழ்க்கை, கல்வி தரம் உயர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது’ என தெரிவித்தார்.