வங்க தேசத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

வங்க தேசத்தில் முஸ்லிம்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள், கோயில்கள், வீடுகளுக்கு தீ வைப்பு, பெண்கள் மானபங்கம், கொலைகள் உள்ளிட்ட கொடூர வன்முறைகளை கண்டித்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், பாரதம் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்த ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச தூதரகத்தின் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, முஸ்லிம் பெரும்பான்மையாக வசிக்கும் வங்க தேசத்தில் சிறுபான்மையின ஹிந்துக்களுக்கு அந்நாடு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், உரிய நீதி கிடைக்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்ற முழக்கத்தை எழுப்பினர். இதே போன்ற போராட்டங்கள் பாரதம், வங்க தேசம், அமெரிக்கா உட்பட உலகில் சுமார் 150 நாடுகளில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.