பாரதத்தை பிரித்து பாகிஸ்தான் என்ற நாட்டை நிறுவி, அங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான ஹிந்துக்களை அகதிகளாக துரத்தி, ஆயிரக்கணக்கானோரை கொன்று, பல்லாயிரம் பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, பல லட்ச கட்டாய மதமாற்றங்கள் நடக்க முக்கியக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் சிலை, பலுாசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை பலுாச் பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். முன்னதாக, ஜின்னா கடைசியாக வசித்த கட்டடம் கடந்த 2013ல் பலுாச் பயங்கரவாதிகளால் தீ வைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இந்த சிலை தகர்ப்பு சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.