இயக்குனர் லீனா மணிமேகலை என்பவர், ‘காளி’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளதுடன் அதில், காளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வெளியிடப்பட்ட அதன் போஸ்டரில் ‘காளி’ தோற்றத்தில் ஒரு பெண் புகை பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஹிந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு ஹிந்து சமூகத் தலைவர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. லீனாவை கைது செய்ய வேண்டும் என்று ஹிந்துக்கள் சார்பில் புகார் தரப்பட்டு வருகிறது. கனடாவில் உள்ள ஹிந்துக்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஹிந்து மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் ஆட்சேபனைக்குரிய இந்த ‘காளி’ திரைப்பட வெளியிடலை திரும்பப் பெறுமாறு கனடா அதிகாரிகளிடம் பாரத தூதரகம் வலியுறுத்தியுள்ளது.