இன்று காலை 11 மணிக்கு உத்தராகண்டின் ரிஷிகேஷில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, பி.எம் கேர்ஸ் நிதியுதவியின் கீழ் 35 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிறுவப்பட்ட 35 பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (பி.எஸ்.ஏ) ஆக்ஸிஜன் ஆலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தற்போதுவரை, நாடு முழுவதும் பி.எம் கேர்ஸ் நிதியுதவியின் கீழ் மொத்தம் 1,224 பி.எஸ்.ஏ ஆக்ஸிஜன் ஆலைகளுக்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 1,100 க்கும் மேற்பட்ட ஆலைகள் இயக்க நிலையில் உள்ளன. இவை நாள் ஒன்றிற்கு 1,750 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. இந்த ஆலைகளின் செயல்பாடு, பராமரிப்புக்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், அவற்றின் செயல்பாடுகள், செயல்திறனை தொலைவில் இருந்து கண்காணிக்க இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐ.ஓ.டி) சாதனத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றன.