பிரத்யேக சரக்கு முனையம்

வடக்கு கர்நாடகா பிராந்தியத்தின் வர்த்தகம் மற்றும் தளவாட போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சியாக, அதன் முதல் பிரத்யேக உள்நாட்டு விமான சரக்கு முனையத்தை அம்மாநில அரசு ஹூப்ளி விமான நிலையத்தில் செயல்படுத்தியுள்ளது. இதற்காக, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) மற்றும் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அன்ட் அலைட் சர்வீசஸ் நிறுவனம் இணைந்து ஹூப்ளி விமான நிலையத்தில் உள்ள பழைய பயணிகள் முனைய கட்டிடத்தை 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்து சரக்கு முனையமாக மாற்றியது. இந்த முனையம் ஆண்டுக்கு 15,000 மெட்ரிக் டன் அளவிற்கான பல்வேறு வகை சரக்குகளை கையாளும் திறன் கொண்டது. மதிப்புமிக்க பொருட்கள், ஆபத்தான பொருட்களுக்கான பிரத்யேக சேமிப்பு தலங்கள்,, சரக்கு அனுப்புபவர்களுக்கான வணிக அலுவலக இடம், இ காமர்ஸ் மற்றும் கூரியர் நிறுவனங்கள் சரக்கு முனையத்தில் அமைக்கப்பட்டு உள்ளன.