ஏழைப்பெண்கள் கடன் தள்ளுபடி

ஏழை பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் அசாம் மாநில பா.ஜ.க தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அங்கு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தற்போது அங்குள்ள ஏழைப்பெண்கள், குறு நிதி நிறுவனங்கள் எனப்படும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் அமைப்புகளிடம் பெற்ற 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. கடன் வழங்கிய 38 நிதி நிறுவனங்களுக்கு அந்த நிதியை அசாம் மாநில அரசே வழங்கும். முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அசாம் அரசின் நிதித்துறையும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் கையெழுத்திட்டன. இதனால், 14 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைவார்கள்.